ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணிகளாகக் கருதப்படும் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
மேலும், இரு அணிகளும் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களமிறங்குகின்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ரஸல் ஆட்டத்தை சென்னை அணி வீரர்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.