தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னைக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? - Rahane

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் வலிமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது.

சென்னை

By

Published : Apr 11, 2019, 11:41 AM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணியை எதிர்த்து புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திலிருக்கும் ராஜஸ்தான் அணி மோதுகிறது. இந்தத் தொடரில் இருஅணிகளும் மோதிய முந்தையப் போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு சென்னை அணியை ராஜஸ்தான் அணி பழிதீர்க்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் வாட்சன், டூ பிளஸிஸ், தோனி, ஜாதவ் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் நம்பி வருகிறது. ரெய்னா, ராயுடு ஆகியோர் நடுவரிசையில் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில், ராயுடு விரைவில் ஃபார்மிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் பிராவோ இல்லாத நிலையில், குஜ்லஜின், சாஹர் சிறப்பாக செயல்படுகின்றனர். அதேபோல் சுழற்பந்து வீச்சுக் கூட்டணியான ஹர்பஜன்-தாஹிர் இணை எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தோனியின் அற்புதமான கேப்டன்சியால் ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைக்கேற்ப சிறப்பான ஆட்டத்தை சென்னை வீரர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

தோனி

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பட்லர் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக ஆடுகிறார். கேப்டன் ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் அதிரடியாக ரன் குவிக்கத் தவறிவருகின்றனர். கடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஃபார்மிற்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய வீரர் சஞ்சு சாம்சன் காயத்திலிருந்து மீளாமலிருப்பது அனிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆஷ்டன் டார்னர், இஷ் சோதி, மனன் வோரா ஆகியோருக்கு

ராஜஸ்தான் அணியில்

வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பிவரும் கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், குல்கர்னி, மிதுன் ஆகியோர் சென்னை அணியின் பேட்டிங் வரிசைக்கு எவ்வாறு தாக்குப்பிடிக்கபோகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வலிமையான சென்னை அணியை சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details