தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெங்களூருவை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஹைதராபாத்? - டி வில்லியர்ஸ்

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று களமிறங்குகிறது.

பெங்களூருவை

By

Published : May 4, 2019, 1:43 PM IST

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால், வெற்றிக்கு மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார்னர், பெயர்ஸ்டோவ் ஆகியோர் நாடு திரும்பியுள்ள நிலையில், பேட்டிங்கில் மனீஷ் பாண்டேவை மட்டுமே ஹைதராபாத் அணி நம்பியுள்ளது. மனீஷ் பாண்டேவும் உச்சபட்ச ஃபார்மில் உள்ளதால் அவரைக் கட்டுப்படுத்துவது பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் இந்த வருடம் அதற்கு சிறந்த வருடமாக அமையவில்லை. பெங்களூரு அணியின் பேட்டிங்கில் கோலி, டி வில்லியர்ஸ், பார்திவ் படேல் ஆகியோரை மட்டுமே நம்பி வருகிறது. இந்த சீசனை வெற்றிகரமாக முடிக்கும் நோக்கத்துடன் மிகப்பெரிய ஆட்டத்தை சொந்த மைதானத்தில் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோலி

பெங்களூரு அணியின் சாஹலும், ஹைதராபாத் அணியின் ரஷீத் கானும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியத் துருப்புச் சீட்டாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத் திகழும் பெங்களூரு மைதானத்தில் பந்துவீச்சாளர்களை நம்பி களமிறங்கும் ஹைதராபாத் அணிக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு கிட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details