தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கெய்லை சமாளிக்குமா பெங்களூரு? - ஸ்டெயின்

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடுகிறது.

KXIP vs RCB

By

Published : Apr 24, 2019, 1:49 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. கோலி, டி வில்லியர்ஸ், மொயின் அலி, ஸ்டோனிஸ், பார்திவ் படேல் ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர். ஸ்டெயின், நெகி, உமேஷ் யாதவ், சாஹல் ஆகியோர் பந்துவீச்சில் பலமளிக்கின்றனர்.

பஞ்சாப் அணியில் கெய்ல், ராகுல், அகர்வால், மில்லர், மன்தீப் சிங் ஆகியோர் பேட்டிங்கில் அபாரமான ஃபார்மை தொடர்ந்தால் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். பந்துவீச்சில் கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின், ஷமி, வில்ஜோயன் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர்.

பஞ்சாப் அணியில் ஆடும் பெரும்பான்மை வீரர்கள் பெங்களூரு அணிக்காக ஆடியுள்ளதால், பெங்களூரு மைதானத்தின் தன்மை தெரிந்திருக்கும். எனவே பெங்களூரு அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துவிட்டதால், எந்தக் கவலையுமின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என கிரிக்கெட் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக இந்த இரு அணிகளும் மோதிய 23 போட்டிகளில், 11 போட்டிகளில் 11 பெங்களூரு அணியும், 12 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளதால் இன்றையப் போட்டியில் யார் வெல்வார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details