இன்றைய ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ரஸலின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் விளையாடி அபார வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து பந்துவீச்சில் சொதப்பி வரும் நிலையில், ரஸல் அதிரடியை எவ்வாறு ராஜஸ்தான் அணி கட்டுப்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பின்னி, வருண் ஆரோன் ஆகியோருக்கு பதிலாக பிராஷந்த் சோப்ரா, மிதுன் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் ஃபெர்குசனுக்கு பதிலாக ஹாரி களமிறங்கியுள்ளார்.