தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொல்கத்தாவை வீழ்த்தி ஈடனில் கொடிநாட்டுமா சென்னை? - Rayudu

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

ஐபிஎல்

By

Published : Apr 14, 2019, 12:16 PM IST


12ஆவது ஐபிஎல் சீசன் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன் முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதுவரை சென்னை அணி ஆடிய ஏழு போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் தொடரின் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா, கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாபமாக ஆடிவருகிறது.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில், பெரிய ஸ்கோர்களை எட்டுவதற்கு ரஸலை மட்டுமே நம்பி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய ரஸல் ஏழு போட்டிகளிலும் தொடர்ந்து 40+ ரன்களை அடித்து நொறுக்குகிறார். அதனால் இறுதி ஓவர்களில் கொல்கத்தா அணி ரஸலை மட்டுமே நம்புவது எதிரணியிருக்கு எளிதாக யூகிக்கும் வகையில் உள்ளது.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மட்டுமே ஆறுதலளிக்கிறார். பிரசித் கிருஷ்ணா, ஃபெர்குசன், ஹார்ரி ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுனில் நரைன், லின் ஆகியோர் அணிக்கு திரும்புவதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கடந்த போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கப் போராடும் என்றும் தெரிகிறது.

தினேஷ் கார்த்திக் - ரஸல்

கொல்கத்தா அணி ரஸலை எவ்வாறு நம்பி வருகிறதோ அதேபோல் சென்னை அணி தோனியை நம்பி வருகிறது. இறுதி ஓவர்களின்போது தோனி விரைவாக ரன்கள் எடுக்கவில்லையென்றால் சென்னை அணியின் ஸ்கோர் 150 ரன்களை தாண்டுவது மிகக்கடினமாக இருக்கும். பேட்டிங்கில் டூ ப்ளஸிஸ், பாகுபலி ராயுடு ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராயுடு

சென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவராக ஃபார்மிற்கு திரும்பிவரும் நிலையில், சின்ன தல சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியில் கெத்து காட்டுவார் என நம்பப்படுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் அவர் மீதான கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இல்லாததால் மிட்சல் சான்ட்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம்வாய்ந்த இரு அணிகளும் விளையாடவுள்ளதால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details