சென்னை அணியின் வீரர்கள் எப்போதும் தோனியின் 'கேப்டன் கூல் மோடு'லேயே இருந்துவருகின்றனர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கெத்தாக இருக்கும் சென்னை அணி வீரர்கள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக கல்லி-ராப் பாடல் ஒன்றை சென்னை அணி வீரர்கள் பாடி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
'எங்க கல்லி கிரிக்கெட்டுக்கு பெரிய விசில் அடிங்க' எனத் தொடங்கும் பாடலின் தொடக்கத்தில் சென்னைத் தமிழ் பேச சென்னை வீரர்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். சிறிது நேரம் பின்னர், சிங்காரச் சென்னையின் அழகிய தமிழை அழகாகப் பாடி கெத்து காட்டுகின்றனர்.