ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி, பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் இன்று தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், இன்றையப் போட்டியில் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார்.
கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த வார்னர், இன்றையப் போட்டியின் மூலம் மீண்டும் ஹைதராபாத் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால், அவரது ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.