ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணியின் ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு கரியப்பா, ப்ரித்விராஜ், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹைதராபாத் அணியில் யூசுப் பதான் அணிக்கு திரும்பியுள்ளார்.