2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். இந்தப் போட்டியின் பஞ்சாப் வீரர் சாம் கரண் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு அணிக்கு திரும்பியது, அந்த அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கை பலப்படுத்தியுள்ளது. அந்த அணியில் ஜாஸ் பட்லர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், ரஹானே மோசமான ஃபார்மில் இருப்பது, அந்த அணியின் ஆட்டத்திறன் மீது சற்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மறுமுனையில் கடந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்ற, பஞ்சாப் அணி அடுத்த எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுது. இப்படி பஞ்சாப் அணியின் ஃபார்ம் தலைகீழாக மாறியதற்கு முக்கிய காரணம் அஷ்வின். கேப்டன் என்ற பெயரில் இவர் தேவையில்லாத மாற்றங்களை கொண்டு வந்ததோடு மட்டுமின்றி, மூன்றாவது, நான்காவது வீரராக களமிறங்கினார். இதன் விளைவுதான் பஞ்சாப் அந்த அணி கடந்த சீசனில் இருந்து வெளியேறியது.