ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இன்று விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் நிர்வாகம் ரஹானேவை நீக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளதற்கான பலன் கிடைக்குமா என்பது குறித்து இன்று தெரிந்துவிடும்.
டெல்லி அணி இந்தப் போட்டியிலொ வெற்றிபெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.