இன்றைய ஐபிஎல் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் முதல் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் - கிறிஸ் லின் களமிறங்கினர். தொடக்கம் முதலே பட்டாசாய் வெடித்த சுனில் நரைன், கெளதம் வீசிய இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 22 ரன்களை அடித்தார்.
கொல்கத்தா அணி 4.1 ஓவர்களில் 50 ரன்களை அதிரடியாய் கடக்க, ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவது என குழம்பினர். தொடர்ந்து அதிரடி காட்டிய சுனில் நரைன் 8-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 16 ரன்கள் சேர்த்தார்.