தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2019 : பஞ்சாப் அணி பவுலிங்! - யுவராஜ் சிங்

மொகாலி : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளது.

punjab

By

Published : Mar 30, 2019, 4:49 PM IST

12-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலானப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் மும்பை அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

இந்த தொடரில், இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இந்த போட்டியில் களமிறங்கிறது.

மும்பை வீரர்கள் யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா ஆகியோர் அபாரமான ஃபாரிமில் உள்ளதால் இன்றையப் போட்டியில் சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில், மும்பை அணியின் பேட்டிங்கை சமாளிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியில் பந்துவீச்சாளர் வருண் சக்கர்வர்த்திக்கு பதிலாக முருகன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார்.

மும்பை அணியில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதால் அதே ஆணியுடன் களமிறங்குகிறது.

பஞ்சாப் அணி விவரம் : அஷ்வின், ராகுல், கெய்ல், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், மில்லர், மன்தீப் சிங், முகமது ஷமி, முருகன் அஷ்வின், ஆண்ட்ரூ டை, ஹர்தஸ் வில்ஜோயன்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம் : ரோஹித் ஷர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, மலிங்கா, பும்ரா, மெக்லனகன்,மார்க்கண்டே.

ABOUT THE AUTHOR

...view details