தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2019, 6:05 PM IST

ETV Bharat / sports

ரஸ்ஸலின் ஆக்ரோஷத்தை சமாளிக்குமா அஷ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்...!

கொல்கத்தா : ஐபிஎல்-இன் இன்றையப் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

கொல்கத்தா vs பஞ்சாப்

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இன்றையப் போட்டியில் கொல்கத்தா-பஞ்சாப் அணிகள் களம் காணுகின்றன.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில், பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சமபலத்துடன் இருக்கின்றன. பேட்டிங்கில் கிறிஸ் லின், நிதீஷ் ராணா, உத்தப்பா, தினேஷ் கார்த்திக், இளம் வீரர் கில் மற்றும் அதிரடியானசிக்சர்களைப் பறக்கவிடும் ரஸ்ஸல் ஆகியோர் இருப்பதால் கொல்கத்தா அணியின் பேட்டிங் படுமிரட்டலாக அமைந்துள்ளது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோர் நிச்சயம் பஞ்சாப் அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பார்கள். அதேபோல் ஃபெர்குஷன், இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் ஆகியோர் உள்ளதால் பரப்பரபான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பஞ்சாப் அணியில் ராகுல், கெய்ல், அகர்வால், மந்தீப் சிங், சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் ஆடினாலும் ராகுல் கெய்ல் இருவர் மட்டுமே பஞ்சாப் அணிக்கு ஆறுதலிளிக்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அஷ்வின், சாம் கரன், ஷமி, முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக செயல்படுகின்றனர்.

கடந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் வலிமையான பந்துவீச்சுக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸ்ஸல் பல வாணவேடிக்கைகள் காட்டி, அணியை எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். எனவே இவரை சமாளிக்க பஞ்சாப் அணியினர் தனி வியூகத்துடன் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணியிலும் அதிரடி வீரர்கள் உள்ளதால் சிக்சருக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்க்கின்றனர்.

கடந்த போட்டியில் அஷ்வின் மன்கட் சர்ச்சையில் சிக்கியபின், இன்றையப் போட்டியில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details