தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஷிகர் தவான் விரைவாக ரன் குவிக்க வேண்டும் : பயிற்சியாளர் பாண்டிங்! - IPL 2019

டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தான் விரைவாக ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும் என பயிற்சியாளர் பாண்டிங் பேசியுள்ளார்.

தவான்

By

Published : Mar 27, 2019, 1:10 PM IST

Updated : Mar 27, 2019, 1:18 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்றையப் போட்டியில் டெல்லி - சென்னை அணிகள் மோதின. அதில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தோல்விக்கு பின்னர் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'இந்த பிட்ச்பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. தொடக்க வீரர் ஷிகர் தவான் விரைவாக ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் ரிஷப் பந்த்-தை மட்டுமே நம்பி டெல்லி அணி இருக்க கூடாது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இளம் வீரர் ப்ரித்வி ஷா ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாட வேண்டும். 15 முதல் 20 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்' எனத் தெரிவித்தார்.

ஷிகர் தவான் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் 43 ரன்களும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 27, 2019, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details