கொல்கத்தா ’ஈடன் கார்டன்’ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இன்று மோதுகிறது.
இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டி சூப்பர் ஓவர்வரை சென்று, ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி வெற்றிபெற்றது. இதனால் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு கொல்கத்தா பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், ஷிகர் தவான் என இளம் வீரர்களுடன் உள்ளனர். ஆனால் கூட்டாக இணைந்து செயல்படுவதில் தவறிவருகின்றனர். டெல்லி அணி வெற்றி பெற ’பேபி சிட்டர்’ ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆட வேண்டும். பந்துவீச்சில் ரபாடா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.