தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹர்பஜனின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய பெங்களூரு அணி!

சென்னை: சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி மிகவும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிபடுத்தி வருகிறது.

சிஎஸ்கே - ஆர்சிபி

By

Published : Mar 23, 2019, 9:17 PM IST

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சின்ன தல சுரேஷ் ரெய்னா, கிங் கோலி ஆகியோருக்கு இடையே முதலில் 5000 ரன்களை யார் அடிப்பார்கள் என்ற பெரும் போட்டி நிலவி வந்தது. அதைத்தொடர்ந்து, இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பெங்களூரு அணியில் கோலி, பார்திவ் படேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதனால், இந்தப் போட்டியின் மூலம் கோலி முதலில் 5000 ரன்களை குவித்து புதிய சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே விராட் கோலி, ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஃபிளாட் பிட்ச் ஆக வந்த பந்தை கோலி, மிட் விக்கெட் திசையில் அடித்தார். ஆனால், பந்து மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்திருந்த ஜடேஜாவிடம் பிடிப்பட்டது.

இதனால், முதலில் 5000 ரன்களைப் படைக்கும் வாய்ப்பை கோலி நழுவ விட்டார். அவரைத் தொடர்ந்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய மொயின் அலி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல்-ன் முதல் சிக்சரை விளாசினார். பின் அவரும் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நான்காவது வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸையும் ஹர்பஜன் தனது துல்லியமான பந்துவீச்சினால் அவுட் ஆக்கினார். ஆட்டத்தின் 8வது ஓவரின் முதல் பந்தில், டிவில்லியர்ஸ் அடித்த பந்தை இம்ரான் தாஹிர் நழுவ விட்டார். பின்னர் அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் (square leg) திசையில் ஷாட் அடித்த பந்தை ஜடேஜா சிறப்பாக பிடித்தார்.

இந்தப் போட்டியின் மூலம் அறிமுகான ஹெட்மயர் (0) வந்த வேகத்திலேயே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபேவை இம்ரான் தாஹிரும், காலின் டி கிராண்ட்ஹொமை ஜடேஜாவும் வெளியேற்றினர். பின்னர் மீண்டும் 12வது ஓவரை வீச வந்த இம்ரான் தாஹிர், நவ்தீப் சைனியை அவுட் ஆகினார். சற்றுமுன்பு வரை பெங்களூரு அணி 11.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. பார்திவ் படேல் 18 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details