தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு பிசிசிஐ நிதியுதவி! - ஐபிஎல்

சென்னை: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 20 கோடி ரூபாயும், சென்னை அணி தரப்பில் இரண்டு கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிசிசிஐ, சிஎஸ்கே நிதியுதவி

By

Published : Mar 24, 2019, 12:31 PM IST

Updated : Mar 24, 2019, 12:39 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

முன்னதாக,புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவாகும் பணத்தை, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.

அதன்படி, நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, பிசிசிஐ சார்பில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு 11 கோடி, சி.ஆர்.பி.எஃப். படையினருக்கு7 கோடி, இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு தலா ஒரு கோடி என மொத்தம் 20 கோடி ரூபாய்க்கான காசோலையை பாதுகாப்புப் படைஅலுவலர்களிடம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணி தனது முதல் லீக் போட்டியின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயை,புல்வாமா தாக்குதலில் மரணடமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் 12ஆவது சீசனின் முதல் ஆட்டம்நேற்றுதொடங்குவதற்கு முன்னதாக, சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட் மூலம் கிடைத்த இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை அணியின் கேப்டன் சி.ஆர்.பி.எஃப். அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தார்.

Last Updated : Mar 24, 2019, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details