12-வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் நேற்றைய போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ரஹானேவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்! - சென்னை vs ராஜஸ்தான்
சென்னை அணிக்கு எதிரான போட்டியின்போது ராஜஸ்தான் அணி 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
rahane
இதில் ராஜஸ்தான் அணி பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரங்களைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்தபோட்டியில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன்னர் மும்பை- பெங்களூரு போட்டியின்போது, பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்ட மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.