இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - தவான் இறங்கினர். இந்த இணை தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியது. அதிலும் தவான் மும்பை வீரர்களை பவுண்டர் லைனிற்கு தொடர்ந்து அனுப்பி வைத்தார்.
முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவரைத் தொடர்ந்து காலின் முன்ரோ - ப்ரித்வி ஷா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது பந்துவீசிய ராகுல் சாஹர் பந்தில் பிரித்வி ஷா 20 ரன்களில் ஆட்டமிழக்க, முன்ரோ 3 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்னிலும், நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் 7 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.