12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனை சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எங்க ஐபிஎல் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் நாங்க செதுக்கினதுடா - தாஹிர்! - YELLOVE
விசாகப்பட்டினம்: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் நடிகர் அஜித்தின் பில்லா வசனத்தைப் பதிவிட்டு வெற்றியைக் கொண்டாடி வருகிறார்.
ஐபிஎல்
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னை அணியின் பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எங்களோட சென்னை அணியின் வாழ்க்கையில ஒவ்வொரு ஐபிலும், ஒவ்வொரு மேட்ச்சும், ஒவ்வொரு ஓவரும், ஏன் ஒவ்வொரு பந்தும் நாங்களா செதுக்கினதுடா... எடுடா வண்டிய..போடுடா விசில...' என நடிகர் அஜித்தின் புகழ்பெற்ற பில்லா பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாது, அஜித்தின் ரசிகர்களும் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.