நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் வீரர் பட்லரை, பஞ்சாப் வீரர் அஷ்வின் 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐசிசி விதியின்படி ஆட்டமிழக்கச் செய்த அஷ்வினுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அஷ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹர்ஷா போக்ளே! - அஷ்வின்-பட்லர்
'மன்கட்' அவுட் முறை சர்ச்சையில் சிக்கியுள்ள அஷ்வினுக்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அஸ்வினை ஆதரித்து பதிவிட்டுள்ள பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, "மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்வதற்குமுன் வார்னிங் கொடுக்க வேண்டும் என பலரும் கூறுகின்றனர். அதற்கு, ஐசிசி விதியின்படி சர்வதேச கிரிக்கெட்டில் யாருக்கும் வார்னிங் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்கையில், வார்னிங் கொடுத்துக் கொண்டா இருக்கிறார்" என, கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அஷ்வின் 'மன்கட்' முறையில் அவுட் செய்து களநடுவரிடம் அப்பீல் மட்டுமே செய்தார். ஐசிசி-யின் விதிமுறைகளின் கிழ் மூன்றாவது நடுவரால் 'அவுட்' தீர்ப்பு வழங்கப்பட்டது, என்றார்.