தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த...ஹர்பஜனின் 'சூப்பர் டீலக்ஸ்' ட்வீட்

சென்னை: சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் டீசர் வசனங்களை, தோனிக்கும், சிஎஸ்கே-விற்கு ஏற்றவாறு ட்வீட் செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜனின் 'சூப்பர் டீலக்ஸ்' ட்வீட்

By

Published : Apr 1, 2019, 7:32 PM IST


தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், யுவன் இசையில், விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஃபவாத் ஃபாசில், மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் டீசரில் விஜய் சேதுபதி கூறும் ஒரு ஆளு, ஒரு மலைபாதையில தனியா போகையில என்ற வசனத்தை சென்னை வீரர் ஹர்பஜன் சிங், தல தோனிக்கும், தனது அணிக்கும் இணைத்து ட்வீட் செய்துள்ளார்.

ஹர்பஜனின் 'சூப்பர் டீலக்ஸ்' ட்வீட்

அதில், ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி தோனி புடிச்சி தொங்க, அந்த தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா ஐபிஎல் கப்பு கீழ ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது சென்னை சூப்பர் கிங்ஸ் #SuperDeluxe நன்றி சேது ஜி என ட்வீட் செய்துள்ளார்.

சூப்பர் டீலக்ஸ் பட ஸ்டைலில் ஹர்பஜனின் இந்த ட்வீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details