தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிறுவயதில் கெய்லுடன் புகைப்படம் எடுத்த சாம் கரண்! - பஞ்சாப்

மொகாலி : பஞ்சாப் அணியின் சாம் கரண் சிறுவயதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

gayle

By

Published : Apr 5, 2019, 5:13 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் சாம் கரண் டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். தற்போது, பஞ்சாப் அணியின் சகவீரரான கிறிஸ் கெய்ல் சிறுவயதில் சாம் கரணுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு, அதில் நான் இளமையாக உள்ளேன். ஆனால் சாம் கரண் இளைஞனாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளார். இதற்கு சாம் கரண், இந்த தொடரில் உங்களுடன் விளையாடி கற்றுக் கொள்வதில் ஆவலாக இருக்கிறேன் என பதில் கூறியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details