தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'யுனிவர்ஸல் பாஸ்' கிறிஸ் கெயிலின் மற்றொரு சாதனை! - யூனிவர்ஸல் பாஸ்

மொகாலி: டி20 கிரிக்கெட்டில் 100 முறைகளுக்கு மேல் 50க்கும் அதிகமான ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார்.

கெயிலின் மற்றொரு சாதனை

By

Published : Apr 14, 2019, 4:40 PM IST

கிரிக்கெட்டின் யுனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெயில்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அந்த அளவிற்கு குறிப்பாக டி20ல் இவர் ஏரளமான சாதனைகள் படைத்துள்ளார். 39 வயதானாலும் இளம் வீரரை விட அதிரடியாக ஆடிவரும் இவர் டி20 கிரிக்கெட்டில் மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. இருப்பினும், இப்போட்டியில் கெயில் 64 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 99 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை வீரர் ரெய்னாவிற்கு பிறகு 99 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் கெயில்.

அதைத்தவிர, டி20 கிரிக்கெட்டில் 100 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்ற மைல்கள் சாதனையை படைத்துள்ளார். இதுவரை 370 டி20 போட்டிகளில் விளையாடி 21 சதம், 79 அரைசதம் என மொத்தம் 12,640 ரன்களை குவித்துள்ளார் யூனிவர்ஸல் பாஸ் கெயில். டி20 கிரிக்கெட்டுக்கு இவர்தான் பாஸ் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details