ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. அப்போது சென்னை அணியின் ரசிகர்களால் குட்டி தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஓவரின் இடைவேளை முடிந்து மீண்டும் ரெய்னா பேட் செய்ய கிளம்பியபோது ரிஷப் பந்த் அவரை தடுத்து அவருடன் குறும்புச்சேட்டை செய்தார். பின்னர் ரெய்னா சிரித்துக்கொண்டே பேட்டிங் ஆட சென்று விடுகிறார். இந்த வீடியோ ஐபிஎல்-இன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த பதிவின் கீழ் சென்னை ரசிகர்கள், இதுபோன்ற முயற்சிகளை தோனியிடம் செய்ய வேண்டாம் என அவருக்கு எச்சரிக்கை கமெண்டுகளை பதிவிட்டனர்.