தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

4ஆவது முறையாக ஐபிஎல்-இல் ஓய்வெடுத்த 'தல' தோனி! - ஐபிஎல்

ஹைதராபாத்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி கேப்டன் தோனி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

'தல' தோனி

By

Published : Apr 17, 2019, 8:38 PM IST

சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை கேப்டன் தோனிக்கு ஏற்பட்ட முதுகுவலி காரணமாக இந்தப் போட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை அணிக்கு சின்ன தல சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுகிறார். தோனியின் இடத்தில் இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கியுள்ளார். அதேபோல் தோனி இல்லாத சமயங்களில் சின்ன தல ரெய்னா கேப்டனாக செயல்பட்ட அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது.

'தல' தோனி

மேலும், சென்னை அணிக்காக இந்த போட்டியோடு இதுவரை நான்கு போட்டிகளில் கேப்டன் தோனி பங்கேற்காமல் இருந்திருக்கிறார்.

கடைசியாக 2010ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிரான போட்டின்போது ஓய்வளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 9 வருடங்களில் ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிடாதது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details