12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான 50ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக, சென்னை அணியில் இடம்பெறாத தோனி, இன்றைய போட்டியில் மீண்டும் கேப்டனாக செயல்படுகிறார்.
சென்னை அணியில், மூன்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன முரளி விஜய்,மிட்சல் சான்ட்னர், துருவ் ஷோரே ஆகியோருக்கு பதிலாக தோனி, ஜடேஜா, டு பிளசிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மறுமுனையில், டெல்லி அணியில் இஷாந்த் ஷர்மா, ரபாடா ஆகியோருக்கு பதிலாக ஜெகதீசா சுசித், டிரெண்ட் போல்ட் அணியில் தேர்வாகியுள்ளனர்.