தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி! - ஸ்ட்ரேயஸ் ஐயர்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட பந்த்

By

Published : Mar 25, 2019, 12:01 AM IST

12-வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், நான்காவது போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, டெல்லி அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, ரிஷப் பந்த்-ன் அட்டகாசமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷ்ப் பந்த் 27 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோஹித் சர்மா- டீ காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களில் இஷாந்த் சர்மா பந்தில் வெளியேற, தொடர்ந்து வந்த சூர்ய குமார் யாதவ் 2 ரன்னில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டீ காக் 16 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி 45 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க தடுமாறியது.

சூர்ய குமாரை ரன் அவுட்டாக்கிய ஸ்ரேயஸ்

பின்னர் வந்த அனுபவ வீரர் யுவராஜ் சிங் - பொல்லார்ட் இணை நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டது. அக்ஸர் படேல் வீசிய 10-வது ஓவரில் யுவராஜ் சிங் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடிக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமாகினர்.

அடுத்த ஓவரில் கீமோ பவுல் வீசிய ஸ்கோலர் பந்தை கணிக்காத பொல்லார்ட், ராகுல் டிவாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, மும்பை அணியின் நிலை கவலைக்கிடமாகியது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால், யுவராஜ் - குருணால் பாண்டியா இணை நிதானமாக ஆடியது. பின்னர் 42 பந்துகளில் 106 ரன்கள் வெற்றி என்ற நிலை ஏற்பட, குருணால் பாண்டியா அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

அதிரடியாக ஆடிய குருணால் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழக்க, யுவராஜ் சிங் சோலோவாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யுவராஜ்-க்கு உறுதுணையாக பென் கட்டிங் ஆட, மும்பையின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 64 ரன்கள் தேவைப்பட்டது.

பந்தை பவுண்டரிக்கு அடித்த யுவராஜ்

அடுத்த ஓவரில் பென் கட்டிங் 3 ரன்களில் வெளியேற, அடுத்ததாக மெக்லனகன் களமிறங்கினார். தொடர்ந்து ஆடிய யுவராஜ் சிங், 17.3 ஓவரில் பவுண்டரி அடித்ததுடன் ஐபிஎல் போட்டிகளில் தனது 13-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், யுவராஜ் சிங் 53 ரன்களிலும், மெக்லனகன் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அனி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது. டெல்லி அணியில் இஷாந்த், ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details