ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் சென்னையில் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. சென்னை அணியில் தோனி, ரெய்னா, பிராவோ, வாட்சன் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒருபக்கம் இருக்க, மறுமுனையில் கோலி, டிவில்லியர்ஸ், டிகாக் போன்று சிறந்த பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியில் உள்ளனர். இதனால், இவ்விரு அணிகள் மோதும் போட்டி எப்போதும் அனல் பறக்கும் விதமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில், சிஎஸ்கே 14 வெற்றியும், 7 தோல்வியும் பெற்றுள்ளனர். இதில் ரசிகர்களால் மறக்கமுடியாத போட்டிகள் 2012, 2013 இல் சென்னையில் நடந்த போட்டிதான்.
வில்லன் ஆன விராட் கோலி; ஹீரோ ஆன ஆல்பி மார்கல்:
சிஎஸ்கேவின் மறக்கமுடியாத போட்டிகள்! 206 ரன் இலக்குடன் ஆடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 43 ரன் தேவைப்பட்டது. இதனால், பெங்களூரு அணிதான் வெற்றிபெறுவார்கள் என இருந்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. வழக்கத்திற்கு மாறாக, விராட் கோலி 19-வது ஓவரை வீசினார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட சிஎஸ்கே வீரர் ஆல்பி மார்கல் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி 28 ரன்களை சேர்த்தார். இதனால், சென்னை அணி இறுதி ஓவரில் த்ரிலிங் முறையில் வெற்றி பெற்றது.
ஆர்பிசிங்கின் நோபால்; கேமில் முடிந்த அல்டிமேட் டிவிட்ஸ்ட்
சிஎஸ்கேவின் மறக்கமுடியாத போட்டிகள்! 2012 ஆம் ஆண்டை காட்டிலும் 2013 ஆம் ஆண்டில், நடந்த போட்டிதான் இன்னும் அல்டிமெட் டிவிஸ்ட். 166 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த சிஎஸ்கேவின் வெற்றிக்கு கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஆர்.பி.சிங் வீசிய கடைசி பந்தை ஜடேஜா தூக்கி அடிக்கி, அது தெர்ட் மேனில் இருந்த ஃபீல்டரிம் பிடிப்பட்டது. இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கோலியும் பெங்களூரு ரசிகர்களும் இருந்தனர்.
ஆனால், அவர்களது மகிழ்ச்சியை பெங்களூரு அணியின் ஆர்.பி. சிங் தகர்ந்தெறிந்தார். அவர் வீசிய பந்து நோபால் ஆக மாறியதால், சென்னை அணி ஆர்பி.சிங்கின் உதவியால் வெற்றிபெற்றது. இப்படி 2012, 2013-இல் இதுப் போன்று நடந்தப் போட்டியைப் போலவே, இன்றும் நடைபெறுமா என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.