இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்படும் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதியப் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. போதாக்குறைக்கு கொல்கத்தா அணியும் சென்னை போட்டிக்கு முன்னர் 'மூன்று நாட்களில் சந்திப்போம்' என ட்வீட் செய்து சவால் விடுத்திருந்தது. இததையடுத்து இந்த அணிகள் மோதும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.
'நைஸ் மீட்டிங் யூ' கொல்கத்தா - சிஎஸ்கே பதிலடி! - சிஎஸ்கே
சென்னை : சவால் விட்ட கொல்கத்தா அணிக்கு சிஎஸ்கே ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் சென்னை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை
இந்நிலையில், நேற்றையப் போட்டியில் கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து கொல்கத்தா அணி சவால்விட்ட ட்விட்டிற்கு 'நைஸ் மீட்டிங் யூ' (nice meeting you) என ட்விட் செய்து சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. இந்த சம்பவம் சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.