மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கேரளா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநில மக்களவைத் தேர்தலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா தனது குடும்பத்துடன் ராஜ்கோட் தொகுதியில் வாக்கினைப் பதிவு செய்தார்.
இன்று நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. சென்னை அணியின் ஜடேஜா, மும்பை அணியின் பாண்ட்யா சகோதரர்கள், பும்ரா மற்றும் பெங்களூரு அணியின் பார்த்திவ் படேல் ஆகியோர் வாக்களிக்க இதுவரை வரவில்லை.