இது குறித்து அவர் பேசுகையில்,
"காயத்தினாலும், பெண்கள் குறித்த இழிவான பேச்சினாலும் இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஹர்திக் பாண்டியா, தொடர்ந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினார். அவரைப் போன்ற வீரருக்கு கிரிக்கெட்தான் எல்லாமே. மற்றவைகள் எல்லாம் கிரிக்கெட்டுக்கு பிறகுதான். அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வமும் பிரியமும் கொண்டவர் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் தனது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிடுகிறார். அதிக தன்னம்பிக்கை கொண்டவர் அவர். கடினமான நேரத்திலும் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதை அவரிடம் இருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.
நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், குருணால் பாண்டியா 37 ரன்களை அடித்ததோடு மட்டுமின்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதேபோல், ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் 15 பந்துகளிலேயே 32 ரன்களை அடித்ததுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனால், ஜெய்ப்பூரில் இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியிலும் இவர்கள் மும்பை அணியை வெற்றிபெற செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பில் மும்பை அணியின் ரசிகர்கள் உள்ளனர்.