தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோல்வியுடன் கேப்டன்ஷிப் கணக்கைத் தொடங்கிய புவனேஷ்வர் குமார்! - ஹைதராபாத் அணி

கொல்கத்தா : கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. புவனேஷ்வர் குமார் தோல்வியுடன் கேப்டன்ஷிப் கணக்கைத் தொடங்கியுள்ளார்.

புவனேஷ்வர் குமார் - தினேஷ் கார்த்திக்

By

Published : Mar 24, 2019, 9:57 PM IST

12-வது ஐபிஎல் சீசன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய போட்டியில், கொல்கத்தா - ஹைதராபாத் அனிகள் மோதின. ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் களமிறங்கவில்லை. இதனையடுத்து துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் முதன் முறையாக கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஹைதராபத் அணிக்கு கேப்டன்ஷிப் ஏற்று விளையாடிய புவனேஷ்வர் குமாருக்கு, முதல் போட்டியே தோல்வியாக அமைந்துள்ளது. எனவே தனது கேப்டன்ஷிப் கணக்கை தோல்வியுடன் தொடங்கியுள்ளார். மேலும், வில்லியம்சன் களமிறங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தொடர்ந்து இவரே கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் 111 போட்டிகள் விளையாடிய பின் அஷ்வின் கேப்டனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். பிறகு புவனேஷ்வர் குமார் 102 போட்டிகளுக்கு பிறகு கேப்டனாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details