தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2019, 5:01 PM IST

ETV Bharat / sports

உலகக்கோப்பை ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

12-வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணி


12ஆவது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மே30-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களை கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணிக்கு குலாப்தின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த மாதம் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட அஸ்கர் ஆஃப்கான் இடம்பெற்றுள்ளார். தொடக்க வீரர்களாக அதிரடி வீரர் முகமது ஷேசாத், நூர் அலி, ஹஸ்ரத்துல்லா ஷசாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், அனுபவ வீரர் முகமது நபி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தான் அணி மற்ற அணிகளோடு ஒப்பிடுகையில் வலிமையான அணி இல்லையென்றாலும், நிச்சயம் ஒரு பெரிய அணியை தோற்கடித்து தங்கள் திறமையை தொடரின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தும் என அந்நாட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆஃப்கானிஸ்தான் அணி

ஆஃப்கானிஸ்தான் அணி விவரம்: குலாப்தின் நைப் (கேப்டன்), முகமது ஷேசாத், நூர் அலி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆஃப்கான், ஹஸ்மத்துல்லா ஷாகிடி, நஜிபுல்லா ஜத்ரான், சமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷீத் கான், டைவ்லத் ஜத்ரான், ஆஃப்டப் அலம், ஹமீது ஹசன், முஜீப் உர் ரஹ்மான்.

ABOUT THE AUTHOR

...view details