தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

WTC FINAL: முடிவை நெருங்கும் கேன் vs கோலி போர்; நூறை தாண்டிய நியூசி., - IND VS NZ

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல நியூசிலாந்து அணிக்கு, 39 ரன்களே தேவை என்ற நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

கேன் vs கோலி
கேன் vs கோலி

By

Published : Jun 23, 2021, 10:42 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்திய அணி, நியூசிலாந்துக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்ததை அடுத்து, நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

தேநீர் இடைவேளை

இன்றைய ஆட்டத்தின் இரண்டாம் செஷன் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்திருந்தது. அதன் மூன்றாவது செஷனை கான்வே - லாத்தேம் இணை தொடங்கியது.

அஸ்வின் அற்புதங்கள்

தொடக்கத்தில் இந்த இணை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பொறுமையாக கையாண்டது. இதனால், கோலி அஸ்வினிடம் பந்தை கொடுத்தார். கடந்த இன்னிங்ஸைப் போலவே அஸ்வின்தான், இந்த இன்னிங்ஸிலும் முதல் விக்கெட்டை எடுத்தார். முதலில், லேத்தம் 9 ரன்களிலும், கான்வே 19 ரன்களிலும் விக்கெட் எடுத்து வெளியேற்றினார் அஸ்வின்.

நியூசி., நூறு

அதன்பின்னர், களத்தில் நின்ற டெய்லர் - வில்லியம்சன் ஜோடி இந்திய வீரர்களின் நம்பிக்கை தகர்த்துவிட்டது. நியூசிலாந்து அணி தற்போது 100 ரன்களை கடந்துள்ள நிலையில், சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இன்னும் 39 ரன்களே தேவையாகயுள்ளது.

கலைந்ததா கனவு?

ஆனால், இந்திய அணிக்கோ மீதமுள்ள 8 விக்கெட்டையும் வீழ்த்தினால் மட்டுமே வாய்ப்புள்ளது என்பதால், கடுமையாக போராடி ஆட்டத்தை டிராவாவது செய்யவேண்டும் என்ற இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: WTC FINAL: முடிந்தது இந்திய இன்னிங்ஸ்; நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!

ABOUT THE AUTHOR

...view details