தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

WTC FINAL: விடாமல் துரத்தும் மழை; இன்றும் தாமதம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நான்காம் நாளான இன்றும் (ஜுன் 21) மழை பெய்து வருவதால், ஆட்டம் தாமதமாக தொடங்கப்படும் என போட்டி நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் தாமதம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையால் தாமதம்

By

Published : Jun 21, 2021, 3:36 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மழை... மழை...
நான்காம் நாளான இன்றும் சவுத்தாம்ப்டனில் மழை பெய்து வருவதால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ட்விட்
நேற்றைய ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 101 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 12(37) ரன்களுடனும், டெய்லர் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் பந்துவீச்சில் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

சுழலுக்குச் சாதகம்
மழை ஓய்ந்த பின் ஆட்டம் தொடங்கப்பட்டால் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கம் ஆன் 'ஆஷ்'

நியூசிலாந்து அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இந்திய அணியை விட 116 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூரோ 2020 ரவுண்ட் அப்: ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலி

ABOUT THE AUTHOR

...view details