நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தத் தொடர் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கான அனைத்து வகை போட்டிகளுக்கு பாபர் அஸாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியிலிருந்து முகமது ஆமிர், மூத்த வீரர் சோயப் மாலிக் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 போட்டிகளில் மட்டுமே மாலிக் ஆடிவந்த நிலையில், பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளது, டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து தேர்வு செய்யப்பட்ட அணியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அதேபோல் ஆசாத் ஷஃபிக்கும் ஃபார்மின்மை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ஆமத் பட், டேனிஷ் அஷிஷ், இம்ரான் பட், ரோனைல் நசிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி: