சென்சூரியன்:தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களை விளையாட உள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைக்கு இடையில் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் 'பாக்ஸிங் டே' என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான இன்று (டிசம்பர் 26) தொடங்குகிறது.
மழை வருமா?
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். வழக்கம் போல், இரு அணிகளும் நான்கு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் களமிறங்கியுள்ளது. வானிலை சற்று மேக மூட்டத்துடன் காணப்படுவதால், மழை குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.