லண்டன்:இங்கிலாந்துக்கு சுற்றுப்பயண் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. இத்தொடரில், மூன்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலைப்பெற்றது.
இதையடுத்து, லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
யார் அந்த மூவர்?
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் விடுதியிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்
இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று (செப். 4) இரவு, இன்று (செப். 5) காலை என இரண்டு முறை லேட்ரல் ஃப்ளோ பரிசோதனை (Lateral flow test) மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (செப். 5) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: PARALYMPICS: இந்தியாவுக்கு 5ஆவது தங்கம்; அசத்திய கிருஷ்ணா நாகர்