தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அதிகவேக சதம் அடித்த பிலிப்ஸ்... வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரை வென்ற நியூசி...! - பிலிப்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியை வென்றதையடுத்து, 2-0 என்ற கண்க்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

new-zealand-won-by-72-runs-against-west-indies
new-zealand-won-by-72-runs-against-west-indies

By

Published : Nov 29, 2020, 3:25 PM IST

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் கப்தில் - செஃபெர்ட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், செஃபெர்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கப்தில் 34 ரன்களுக்கு வெளியேற, கான்வே - பிலிப்ஸ் இணை சேர்ந்தது.

இந்த இணை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. முக்கியமாக கீமோ பவுல் வீசிய 11ஆவது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் நியூசி. அணி 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து ஃபேபியன் ஆலன் வீசிய 13ஆவது ஓவரில் பிலிப் ஹாட்ரிக் சிக்சர் அடிக்க, அந்த ஓவரில் 24 ரன்கள் சேர்க்கப்பட்டது.

அதிவேக சதம் விளாசிய பிலிப்

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கு சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவிட, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. அதிரடியாக ஆடிய பிலிப் 46 பந்துகளில் சதம் அடித்து, நியூசிலாந்திற்காக குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுமுனையில் கான்வே அரைசதம் அடித்தார். 20 ஓவர்களில் நியூசி. அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பிலி 108 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கான்வே 65 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அரைசதம் விளாசிய கான்வே

இதையடுத்து கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சரியான தொடக்க கிடைத்தும் பெரிய ரன்களை எடுகக் முடியவில்லை. ஹெட்மயர் 32 பந்துகள் பிடித்து 25 மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 28 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க:பாக். கேப்டன் பாபர் அஸாம் மீது பாலியல் புகார்...!

ABOUT THE AUTHOR

...view details