தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2021, 5:26 PM IST

Updated : Jun 27, 2021, 6:03 PM IST

ETV Bharat / sports

இந்தியா - இங்கிலாந்து மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா திணறல்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததால் இந்திய அணி சற்று திணறி வருகிறது.

ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா

பிரிஸ்டால் (இங்கிலாந்து): மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா அணி, ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி மோதும் மகளிர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி, பிரிஸ்டால் கவுண்டி மைதானத்தில் இன்று (ஜூன்.27) நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

ஷஃபாலியின் முதல் ஓடிஐ

சில நாள்களுக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்திய அணி கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது ஒருநாள் போட்டியின் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டியில் கலக்கிய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மாவிற்கு இப்போட்டிதான் முதல் ஒருநாள் போட்டி. டெஸ்ட் போட்டிகளின் இரு இன்னிங்ஸிலும் கலக்கிய ஷஃபாலி மீது, இன்று அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி தனது முதல் ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகிறார்.

ஏமாற்றிய ஷஃபாலி

இதில், ஸ்மிருதி மந்தனா உடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஷஃபாலி 15(14) ரன்களிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் சற்று நேரத்திலேயே ஸ்மிருதி மந்தனாவும் 10(15) ரன்களிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் இந்திய அணி, 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்ததால், தற்போது திணறி வருகிறது.

இங்கிலாந்து அணி:லாரன் வின்ஃபீல்ட்-ஹில், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), நடாலி ஸ்கைவர், ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர் ), சோபியா டங்க்லி, சாரா கிளேன், கேத்ரின் ப்ரண்ட், அன்யா ஷ்ருப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்

இந்திய அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஷஃபாலி வர்மா, புனம் ராவத், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, தானியா பாட்டீயா (விக்கெட் கீப்பர்), ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரகர், ஏக்தா பிஷ்ட்

இதையும் படிங்க: 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Last Updated : Jun 27, 2021, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details