செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 62.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்படி 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, மொத்தம் 304 ரன்களை எடுத்தது. இறுதியில் 305 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 191 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்படி இந்தியா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவை செஞ்சூரியனில் தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க:SA vs IND: இலக்கு நிர்ணயித்தது இந்தியா; முதல் வெற்றி யாருக்கு?