நியூசிலாந்து அணியின் கேப்டனும் முன்னணி பேட்மேனுமான கேன் வில்லியம்சனின் 31ஆவது பிறந்தநாள் இன்று. சர்வதேச அளவில் தற்போது ஆடிவரும் சிறந்த வீரர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தால் அதில் வில்லியம்சனுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.
விராத் கோலி, ஜோ ரூட் ஆகிய டாப் வீரர்களுக்கு இணையானவர் வில்லியம்சன். சிறந்த டெஸ்ட் வீரரான வில்லியம்சன், டெஸ்டில் வைத்திருக்கும் சராசரி 53.96. பொதுவாக டெஸ்டில் 50க்கும் மேல் சராசரி வைத்திருந்தாலே அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படுவார்கள். மேலும், வில்லியம்சன் டெஸ்டில் இதுவரை 24 சதங்களும் நான்கு இரட்டை சதங்களும் அடித்துள்ளார்.