லண்டன்:இங்கிலாந்து கிரிக்கெட்ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் என்றழைக்கப்பட்டவர் டெட் டெக்ஸ்டர். இவர் வேகப்பந்து வீச்சிலும் திறமை மிக்கவர். 1958ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் 1960களின் தொடக்கத்தில் கேப்டன் ஆனார்.
அதைத்தொடர்ந்து 10 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், 1968ஆம் ஆண்டு தனது டெஸ்ட் போட்டியை விளையாடினார். அந்த வகையில், டெக்ஸ்டர் தனது நாட்டிற்காக 62 டெஸ்ட் விளையாடி உள்ளார். 4,502 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒன்பது சதங்கள் அடங்கும்.66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.