தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு - பிக் பாஷ் தொடர்

ஜனவரி மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி ஆடவிருந்த ஒருநாள் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

englands-proposed-tour-of-pakistan-postponed-until-late-2021
englands-proposed-tour-of-pakistan-postponed-until-late-2021

By

Published : Nov 17, 2020, 7:10 PM IST

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றது. இதையடுத்து பாகிஸ்தான் அணி சார்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பாக ஜனவரியில் ஒருநாள் தொடரிலும், 2022இல் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணி ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கும், அதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுற்றுப்பயணம் செய்வதால், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் பிரச்னை எழுந்துள்ளது.

கடைசியாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 2005ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனால் நீண்ட நாள்களுக்கு பின் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதால், முழுமையான இங்கிலாந்து அணியை அனுப்ப வேண்டும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு எடுத்துள்ளது. அதுபோக, இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பிக் பாஷ் தொடரில் பங்கேற்கவுள்ளதால், இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஓய்வுபெற்ற மாஸ்செரானோவுக்கு மெஸ்ஸி, நெய்மர், ஸாவி பாராட்டு...!

ABOUT THE AUTHOR

...view details