லண்டன் (இங்கிலாந்து):இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
முதலாவது போட்டி வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றது. இதனால், 1-1 என்ற கணக்கில் இத்தொடர் சமநிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரின் ஓவல் மைதானத்தில் (செப். 2) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
அஸ்வினுக்கு மீண்டும் 'நோ'
இந்திய அணி சார்பில் ஷமி, இஷாந்த் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியிலும், முதல் தர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.