லண்டன் (இங்கிலாந்து):இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஆக. 12) தொடங்குகிறது.
நோ அஸ்வின்
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணியில் லாரன்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு பதிலாக ஹசீப் ஹமித், மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி தரப்பில் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் விலகியதால் இஷாந்த சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற 4:1 ஃபார்முலாவில் வழக்கம்போல் களமிறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.