லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆக. 12) தொடங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கே.எல். ராகுல் 127, ரோஹித் சர்மா 83, விராட் கோலி 42 ரன்களை எடுத்திருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளையும், ராபின்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அடுத்தடுத்து விக்கெட்கள்
இந்நிலையில், இன்று (ஆக. 13) கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ராஹானே 1 ரன்னுடனும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இன்றைய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ராகுல் 129 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் ரஹானே 1 ரன்னில் ஆண்டர்சன் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இதன்பின்னர், இடதுகை பேட்ஸ்மேன்களான ஜடஜோ - ரிஷப் பந்த் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்க் வுட் சராசரியாக 87 மைல் வேகத்தில் அதிவேகமாக வீசிக்கொண்டிருக்க, மறுமுனையில் மொயின் அலியிடம் பந்தைக் கொடுத்தார், கேப்டன் ரூட்.
வீழ்ந்தார் ரிஷப்