தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ENGvsIND: இங்கிலாந்து நிதான பேட்டிங்; கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணி முதல் செசனில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்துள்ளது.

England vs India, விராட் கோலி, இந்திய அணி அறிவிப்பு
England vs India

By

Published : Aug 4, 2021, 6:21 PM IST

நாட்டிங்காம் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடவுள்ளது.

இந்நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் டிரான்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (ஆக.4) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பும்ரா, சிராஜ் அசத்தல்

இங்கிலாந்து அணிக்கு ஜோசப் பர்ன்ஸ், டொமினிக் சிப்லி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நீண்ட நாள்களாக டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் எடுக்க தடுமாறிவந்த பும்ரா, ஆட்டத்தின் முதல் ஓவரிலியே பர்ன்ஸை டக்-அவுட்டாக்கினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஜாக் கிராவ்லி, சிப்லியுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் ஜாக் கிராவ்லியை 27 ரன்களுக்கு வெளியேற்றினார். இதன்பின்னர், கேப்டன் ஜோ ரூட் களம் புகுந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு முன் வரை இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிப்லி 18 ரன்களுடனும், ரூட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பிளேயங் XI

இந்திய அணி:ரோகித் சர்மா, கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கயா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி: டொமினிக் சிப்லி, ஜோசப் பர்ன்ஸ், ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டான் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன்.

இதையும் படிங்க: Gold or Silver: இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி; மிரட்டும் ரவிக்குமார்

ABOUT THE AUTHOR

...view details